| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர் தில்லைகங்காநகரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி சத்யநாராயண பெருமாள் திருக்கோவிலில், பகல் பத்து முடிவடைந்து பின் இராபத்தின் கடைசி நாளான 8ம் தேதி வியாழக்கிழமை நம்மாழ்வார் திருவடி தொழுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீலட்சுமி சமேத சத்யநாராயண பெருமாள் சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்துகொண்டு வழிபட்டனர். இதே போல் நங்கநல்லூர் 2வது மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் திருக்கோவிலில் மற்றும் கீழ்கட்டளை ஆஞ்சநேயர் திருக்கோவிலும் வெகு விமர்சியாக நடைபெற்றது.


