Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவ சேவா கமிட்டி, லட்சுமி நகர், நங்கநல்லூர் சார்பில் ஸ்ரீ சுதர்ஷன் மஹால், 6வது மேன் ரோடு, நங்கநல்லூரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சிகளும், அதனைத் தொடர்ந்து ராம்நகர் பகுதியில் நடைபெற்ற உஞ்சவிருத்தி நிகழ்ச்சிகளும் மிகுந்த பக்தி சூழலில் சிறப்பாக நடைபெற்றன.

ஸ்ரீ சுதர்ஷன் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் விநாயகர் பூஜை, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி, லலிதா சஹஸ்ரநாமம், நாம சங்கீர்த்தனம், சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் மாயூரம் ஸ்ரீ ஞானகுரு பாகவதர், சென்னை ஸ்ரீ அஸ்வின் பாகவதர், சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் உள்ளிட்ட பல முன்னணி பக்தர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிகள் பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் இனிதே நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, பரம பகவதோத்தமரும் மஹாரண்யம் ஸ்ரீஶ்ரீஶ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் அத்யந்த சிஷ்யருமான ஸ்ரீஶ்ரீ சட்டநாத பகவதர் ஸ்வாமிகள் தலைமையில், ராம்நகர் பகுதியில் உஞ்சவிருத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

27 ம் தேதி (நேற்று) காலை 7.30 முதல் 9 மணி வரை, ராம்நகர் 3வது தெரு (லேங்கர் அபார்ட்மெண்ட் உட்பட) மற்றும் 4வது மேன் ரோடு பகுதிகளில் உஞ்சவிருத்தி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தர்ம காரியங்களில் பங்குபெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 முதல் 9 மணி வரை, ராம்நகர் 4வது, 5வது, 6வது, 7வது மற்றும் 8வது தெருக்களில் உஞ்சவிருத்தி நடைபெறுகிறது.

பக்தர்கள் ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர். ஸ்ரீ சுதர்ஷன் மஹாலில் நடைபெற்ற மகோத்சவ நிகழ்ச்சிகளும், ராம்நகர் உஞ்சவிருத்தி நிகழ்ச்சிகளும் பக்தர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.| ச வெங்கடேஸ்வரன் |

ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவ சேவா கமிட்டி, லட்சுமி நகர், நங்கநல்லூர் சார்பில் ஸ்ரீ சுதர்ஷன் மஹால், 6வது மேன் ரோடு, நங்கநல்லூரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சிகளும், அதனைத் தொடர்ந்து ராம்நகர் பகுதியில் நடைபெற்ற உஞ்சவிருத்தி நிகழ்ச்சிகளும் மிகுந்த பக்தி சூழலில் சிறப்பாக நடைபெற்றன.

ஸ்ரீ சுதர்ஷன் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் விநாயகர் பூஜை, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி, லலிதா சஹஸ்ரநாமம், நாம சங்கீர்த்தனம், சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் மாயூரம் ஸ்ரீ ஞானகுரு பாகவதர், சென்னை ஸ்ரீ அஸ்வின் பாகவதர், சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் உள்ளிட்ட பல முன்னணி பக்தர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிகள் பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் இனிதே நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, பரம பகவதோத்தமரும் மஹாரண்யம் ஸ்ரீஶ்ரீஶ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் அத்யந்த சிஷ்யருமான ஸ்ரீஶ்ரீ சட்டநாத பகவதர் ஸ்வாமிகள் தலைமையில், ராம்நகர் பகுதியில் உஞ்சவிருத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

27 ம் தேதி (நேற்று) காலை 7.30 முதல் 9 மணி வரை, ராம்நகர் 3வது தெரு (லேங்கர் அபார்ட்மெண்ட் உட்பட) மற்றும் 4வது மேன் ரோடு பகுதிகளில் உஞ்சவிருத்தி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தர்ம காரியங்களில் பங்குபெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 முதல் 9 மணி வரை, ராம்நகர் 4வது, 5வது, 6வது, 7வது மற்றும் 8வது தெருக்களில் உஞ்சவிருத்தி நடைபெறுகிறது.

பக்தர்கள் ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர். ஸ்ரீ சுதர்ஷன் மஹாலில் நடைபெற்ற மகோத்சவ நிகழ்ச்சிகளும், ராம்நகர் உஞ்சவிருத்தி நிகழ்ச்சிகளும் பக்தர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.