| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதன பெருமாள் திருக்கோவிலில் 2026 ஆம் ஆண்டுக்கான பல்வேறு சிறப்பு உற்சவங்கள் கடந்த மே 30ஆம் தேதி நம்மாழ்வார் திருநட்சத்திர உற்சவத்துடன் தொடங்கியுள்ளன. தொடர்ந்து ஜூன் 24ஆம் தேதி சுதர்சன ஜெயந்தி, 25ம் தேதி பெரியாழ்வார் திருநட்சத்திரம் ஆனி கருட சேவை ஆகிய வைபவங்கள் நடைபெற உள்ளன.
மேலும் ஜூலை 1ம் தேதி பிரதிஷ்டா தினம், 17 மற்றும் 24ம் தேதி ஆடி வெள்ளி தாயார் உள் புறப்பாடு, 29ம் தேதி ஜேஷ்டாபிஷேக உற்சவம், 30ம் தேதி அன்னக்கூடை உற்சவம், 31ம் தேதி ஆடி வெள்ளி தாயார் உள் புறப்பாடு. ஆகஸ்ட் 7ம் தேதி கடை வெள்ளி தாயார் உள் புறப்பாடு, 14ம் தேதி திருவாடிப்பூர உற்சவம் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறவுள்ளன.




