Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

கடந்த ஜூன் 12ஆம் தேதி கிருஷ்ண பக்ஷ துவாதசியை முன்னிட்டு, தில்லைகங்கா நகரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி சத்யநாராயண பெருமாள் திருக்கோவிலில் கோஷ்டியினரால் சிறப்பு பாராயணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தாயாரின் உள் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. பாராயண சேவையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மங்கள ஆரத்தி மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன் நிறைவடைந்தது.
அதே நாளில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM