விழாவின் முதல் நாளில் காலை யாகசாலை பூஜைகள், புண்யாஹவாசனம், விநாயகர் பூஜை, கலச ஸ்தாபனம், மந்திர ஜபம் உள்ளிட்ட பல்வேறு வைதீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் திருவாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரிசித்து அருளாசி பெற்றனர்.
திருப்பவித்ரோத்ஸவம் ஜூலை 29 வரை நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் மாலை யாகசாலை பூஜைகள், திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
விழாவின் நிறைவு நாளான ஜூலை 29-ஆம் தேதி பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, பிரசாதம் விநியோகம் மற்றும் மாலை சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது.
இந்த ஆன்மிக விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியின் அருளைப் பெறுமாறு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.




