Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகளின் ஆராதனை விழா, புதன் டிசம்பர் 3 முதல் செவ்வாய் டிசம்பர் 9 வரை சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் ஸ்ரீவித்யா சம்பிரதாயப்படி மிக விசேஷமான மஹாயாக்ரமம் என்ற பூஜை, வியாழன் டிசம்பர் 4 முதல் திங்கள் டிசம்பர் 8 வரை நடைபெற்றது. இந்த ஐந்து நாட்களிலும் காலை நேரங்களில் மஹாயாக்ரம பூஜையும், மாலை நேரங்களில் ஸ்ரீசக்ர நவாவரண பூஜையும் பக்தர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.

குரு ஆராதனை தினமான செவ்வாய் டிசம்பர் 9 அன்று, ஆஞ்சநேயர் ஆலயம் அருகில் உள்ள தியான மண்டபத்தில் உபநிஷத் பாராயணம், அபிஷேகம், குரு மண்டல ஆவரண பூஜை மற்றும் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.

விழா நடைபெற்ற ஆறு நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது