| ச வெங்கடேஸ்வரன் |
தில்லைகங்கா நகரில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் கடந்த 7ம் தேதி டிசம்பர் 2025, ஞாயிறு அன்று நடைபெற்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ அலர்மேல்மங்கா தேவி மற்றும் ஸ்ரீ பூமாதேவி தாயாரின் திருக்கல்யாண வைபவம் மிக விமரிசையாகவும், பக்தி பரவசமாகவும் நடைபெற்றது. காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற திருமண நிகழ்வில் கோயில் முழுவதும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது.
திருக்கல்யாணத்திற்கு கோயில் மேடையில் மிகுந்த அழகுடன் சீர் வைத்திருந்தது. திருமண வைபவத்தை ஒட்டி கோயில் முன்புறம் உள்ள தெருவில் பந்தல் அமைக்கப்பட்டு அங்கே மேடை போடப்பட்டிருந்தது. அங்கே தான் திருமண வைபவம் மிகவும் கோலாகலமாக நடந்தது. தெரு முழவதுமாக பக்தர்கள் நிறைந்ததால் பக்தி நெரிசல் காணப்பட்டது. எல்லா வயதினரும் பெருமாள்–தாயாரின் திருமணத்தை தரிசிக்க ஆர்வமாக காத்து கலந்து கொண்டனர்.
மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற திருவீதியுலா மேலும் சிறப்பை சேர்த்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உலா வந்த பெருமாள் மற்றும் தாயாரை பார்க்க தெருக்கள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். நாதஸ்வர, மற்றும் மங்கள இசையுடன் திருவீதியுலா மிக அழகாக நடைபெற்றது.
மொத்தமாக, இந்த 28ஆம் ஆண்டின் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாகவும், பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட நிகழ்வாகவும் அமைந்தது. பெருமாள் மற்றும் தாயாரின் அருளைப் பெற பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
படங்கள்: RVR




