| ச வெங்கடேஸ்வரன் |
ஆதம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் 18ம் தேதி ஞாயிறு அன்று தை அமாவாசை காலை 7 மணிக்கு ஸ்ரீசாரதாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு ஸ்ரீ சாரதாம்பாள் சன்னதியில் அபிராமி பட்டர் இயற்றிய 100 அபிராமி அந்தாதி பாடல்களும் பாராயணம் செய்யப்படும். ஏறக்குறைய 270 ஆண்டுகளுக்கு முன் அபிராமி பட்டர் திருக்கடையூரில் அவதரித்தார். ஒரு சமயம் சரபோஜி மன்னர் அவரிடம் அன்றைய திதி என்ன என்று கேட்க, அபிராமிபட்டரோ ஞாபக மறதியில், அமாவாசை என்பதற்கு பதிலாக பௌர்ணமி என்று வாய்தவறி கூறிவிட்டார்.
ஆனால் சபையில் இருந்தோர் இதை மறுத்தனர். மன்னரின் பார்வைக்கு பயந்த அவர், அம்பிகை ஒருவாளாலேயே தன் பழியைக் காக்க இயலும் என்று எண்ணியவாறு அம்பிகையை நோக்கி அந்தாதி பாட ஆரம்பித்தார்.
“விழிக்கே” என்று 79வது பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருத்தோட்டை கழற்றி விண்ணில் எறிந்தெருளினாள்.அதுவே முழுநிலவாக காட்சி தந்தது.
அபிராமிபட்டரை மன்னரும் உலகத்தாரும் போற்றினர்.
100 பாடல்களுக்கு அந்தாதி என்று பெயர் வந்தது. முதல் பாடலின் கடைசி வரி அடுத்த பாடலின் முதல் வார்த்தையாக வருவது இதன் சிறப்பு.
இந்த ஆலயத்தில் 79வது பாடல் முடியும்போது கோவில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, ஒரு முழு நிலா போல போன்ற ஒரு விளக்கு மட்டும் எரியும். இதற்கு “நிலா தோன்றல்” காட்சி என்று பெயர்.
மேலும் விபரங்களுக்கு: M.ரமணி – செயலாளர்- 9444053516


