Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

ஆழ்வார்கள் தமிழரங்கத்தின் 7ஆம் ஆண்டு விழா, 10.01.2026 (சனிக்கிழமை) அன்று, வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, ஆழ்வார்கள் தமிழரங்கத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தாளாளர், நங்கைநல்லூர் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியின் டாக்டர் துரை சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். மேலும், திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு தமிழின் பெருமை குறித்து உரையாற்றினார்.
விழாவில் செயலாளர்கள் கவிஞர் மலர்மகன் மற்றும் வழக்கறிஞர் பால சீனிவாசன், பொருளாளர் திருமதி டி. எஸ். பிரேமலதா, துணைத் தலைவர் முனைவர் குமரிச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘“நம்மாழ்வார் திருவாய்மொழி’ என்ற தலைப்பில் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் அவர்கள் விழாவிற்கு வருகை தந்து, மூன்று தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தியதுடன், அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.
இந்த விழாவில், ஸ்ரீ இராமாநுசர் விருது – முனைவர் ம. பெ. சீனிவாசன் அவர்களுக்கும்,
வைணவ அறிஞர் விருது – திரு சௌரி ரகுவீர பட்டாச்சாரியார் அவர்களுக்கும்,
தமிழறிஞர் விருது – புலவர் வெற்றியழகன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
விழா தமிழின் செழுமையையும், ஆழ்வார் இலக்கியத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.