|ச வெங்கடேஸ்வரன்|
நங்கநல்லூர், 16 வது தெரு, தில்லைகங்கா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் சியாமளா நவராத்திரி 2026 விழா சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், நினைவாற்றல் மேம்படவும், தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெறவும் ஸ்ரீ சரஸ்வதியின் அருளைப் பெறும் வகையில் பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜனவரி 19 முதல் ஜனவரி 27 வரை சியாமளா நவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இதில்,
காலை 8 மணி – ஸ்ரீ சியாமளா ஆவரண பூஜை
காலை 9 மணி – ஸ்ரீ சியாமளா ஹோமம் நடைபெற்று வருகிறது.
மேலும், ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமம், மாணவ மாணவிகளுக்கு கூர்மையான மற்றும் தெளிவான புத்திக்கும், கல்வி வளர்ச்சி மற்றும் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக நடத்தப்படும் ஒரு நல்ல வாய்ப்பாகும்.
இந்த பூஜை மற்றும் ஹோமங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:
ஸ்ரீ கிருஷ்ணன் – 99625 14134


