Neighborhood Speaks

40 வருடங்களாக செயல்பட்டு வரும் நங்கநல்லூர் ஹிந்து மிஷன் மருத்துவமனையில் நவீன உபகரணங்கள் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Carestream பல் X-Ray கருவி இம்மருத்துவமனையில் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பல் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது, பற்களின் அமைப்பை துல்லியமாக 360 டிகிரிகளிலிருந்து படம் பிடிக்க இந்த X-Ray கருவி உதவும். இதனால், பல் மருத்துவர்கள் எளிதாக சிகிச்சை அளிக்க முடியும்.

அதே போல மருத்துவமனையின் பிஸியோதெரபி துறையிலும், Virtual Reality Equipment மற்றும் Cryo Cold Compression Equipment போன்ற நவீன கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. Virtual Reality கருவியின் மூலம், நரம்பியல் மற்றும் எலும்பியல் நோயாளிகளுக்கு உடலின் பல்வேறு பகுதிகளின் நரம்புகளையும் தசைகளையும் activate செய்ய முடியும். Cyro Cold Compression கருவி மூலம் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் இதர பகுதிகளின் வலிகளை கணிசமாக குறைக்க முடியும். இந்த இரண்டு கருவிகளின் உதவியினால் அவர்களின் மருத்துவ மற்வாழ்வு (medical rehabilitation) விரைவாகவும் மற்றும் தரமானதாகவும் இருக்கும்.

இந்த மேற்கூறிய கருவிகள் மருத்துவமனையில் இந்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு 89395 88226 / 73055 40851 / 044-22243026 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM