| ச வெங்கடேஸ்வரன் |
வாணுவம்பேட்டை, என்.எஸ்.கே சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி பங்குனி மாதம் 1-ம் தேதி, 15 மார்ச் 2026 அன்று நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, மார்ச் 14 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் பல்வேறு யாகசாலை பூஜைகள், வேத பாராயணம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். மாலை நேரத்தில் தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 15 ஆம் தேதி அதிகாலை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 8 மணி முதல் 9 மணி வரை மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.





