| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த ஜூலை 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
மாலை 4.30 மணியளவில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 7.30 மணியளவில் மாத சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்து அருளாசி பெற்றனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் திரளான வருகையால் ஆன்மிகச் சூழல் நிலவியது.




