Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

தில்லைகங்கா நகர் 18 வது தெருவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் கோயிலில், 36-வது ஆண்டு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை வரும் செப்டம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதையொட்டி அன்று காலை 9 மணிக்கு பாராயணம், காலை 10 மணிக்கு அர்ச்சனை மற்றும் காலை 11 மணிக்கு மஹா பிரசாதம் என நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

மேலும், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அன்று செப்டம்பர் 19-ம் தேதி மாலை 2 மணி முதல் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM