நங்கநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஸர்வ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் 2026 ஆம் ஆண்டிற்கான பங்குனி உத்திரப் பெருவிழா பிரம்மோற்சவம் மார்ச் 22 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தினமும் காலை மற்றும் இரவு பல்வேறு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறவுள்ளன.
விழாவின் முதல் நாளான 22 மார்ச் அன்று இரவு விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
23 மார்ச் அன்று இரவு சிம்ம வாகனம், 24 மார்ச் அன்று இரவு சந்திரபிரபை வாகனம், 25 மார்ச் அன்று இரவு பூதன் பூதகி வாகனம், 26 மார்ச் அன்று இரவு அதிகார நந்தி வாகனம், 27 மார்ச் அன்று இரவு கைலாச வாகனம், 28 மார்ச் அன்று இரவு யானை வாகனம் 29 மார்ச் அன்று காலை 7 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
30 மார்ச் அன்று இரவு குதிரை வாகனம், 31 மார்ச் அன்று இரவு கற்பக விருக்ஷ வாகனம், விழாவின் நிறைவு நாளான ஏப்ரல் 1ம் தேதி அன்று காலை 9 மணிக்கு நடராஜருக்கு தீர்த்தவாரி நடைபெறும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளன.
இந்த விழாவில் நங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க ஆலய நிர்வாகம் சார்பில் அழைக்கப்படுகிறார்கள்.
| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…
| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…
| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…
| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…
| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…
| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…