Neighborhood Speaks

அமைதியாய்,ஆழமாய் தோற்றம் தந்து அதிரடியாய் செயல்படும் பட்டயக் கணக்காளர்களே…
இதோ உங்களுக்கான வாழ்த்து
பட்டயக் கணக்காளர்களே…
நீங்கள் ஒரு அசையா சொத்து தேய்மானம் எத்தனை சதவீதம் இருந்தாலும் பங்கு சந்தையில் உங்கள் மதிப்பு பிரகாசமான வைரம்
நீங்கள் இல்லையேல் அணுவும் அசையாது நீங்கள் இருந்தால் அகிலமும் அசையும்
தவறுகளை தவறாமல் தவறாய் கட்டி காட்டாமல் தவறாமல் தனித் தன்மையுடன் சுட்டி காட்டும் உங்கள் பங்கு வசீகரம்
தொழிலதிபர்கள் தொழிலை தொன்மையுடன் செய்தாலும் தொழிலதிபர்களை காற்றில் உயர பறக்க வைப்பது நீங்கள் தான்
வரிச்சுமைகளுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம்
இன்றைய அங்காடியில் உங்கள் சந்தை மதிப்பிற்கு சொத்து ஜாமீன் இல்லாமலே கடன் அளிக்கலாம்
பொருளாதாரத்தில் உங்கள் பங்கு மாபெரும் பங்கு

சவால்களை எளிமைப்படுத்தும் நிபுணர்
உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பில் உவகில் ஒரு உயரிய மாற்றம்
உங்கள் அயரா சேவைகளுக்கு ஒருமித்த கரகோஷங்கள் இன்று உங்கள் தினம்
– Kirupa Ganesh

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM