| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7 மணி முதல் 12.30 மணி வரை சிவபெருமானுக்கு அபிஷேகம் (ஏகாதச ருத்ரம்) நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஆனி திருமஞ்சன விழா ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு மாலை 6.30 மணிக்கு மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து அருள் பெற்றனர்.
கோவில் மண்டபம் மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வேத பாராயணம் முழங்க, ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சன வைபவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
மேலும், சிவ வாத்தியம் மற்றும் மங்கள வாத்தியம் ஒலிக்க, கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிகமும் பக்தி நிறைந்த சூழல் நிலவியது.
திருமஞ்சன நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்கள் அனைவரும் சுவாமியை தரிசித்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், ஆதம்பாக்கம் சிவன் கோவில் என அணைத்து சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.
| S VENKATESHWARAN | A cleanliness awareness rally was organised at NehruGovernment Boys Higher Secondary…
| S VENKATESHWARAN |Music lovers are invited to enjoy a Carnatic classical musicconcert organised by…
| S VENKATESHWARAN | Two new spiritual books, ‘Sakta Upanishads’ and‘Bhavanopanishad’, were released in a…
| S VENKATESHWARAN |The ongoing sewage pipe replacement work on 1st Main Roadin Nanganallur, being…
| S VENKATESHWARAN |As part of an initiative, last week, the Inner Wheel Club ofNanganallur…
| S VENKATESHWARAN | Neighbourhood devotees will have an opportunity to participatein the Sri Radha…