Categories: Temple News

பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி சிறப்பு பூஜை

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த ஜூலை 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
மாலை 4.30 மணியளவில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 7.30 மணியளவில் மாத சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்து அருளாசி பெற்றனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் திரளான வருகையால் ஆன்மிகச் சூழல் நிலவியது.

venkat

Recent Posts

35ஆம் ஆண்டு இயல், இசை விழா ஆகஸ்ட் 1 முதல்

| ச வெங்கடேஸ்வரன் |சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தெய்வீக இயல் இசை மன்றம் சார்பில் 35ஆம் ஆண்டு இயல், இசை விழா…

1 day ago

447th Panchami concert

|S VENKATESHWARAN| Get ready to immerse yourself in the enchanting melodies of Carnatic music! The…

1 day ago

Taxing time for home owners, civic body

| S VENKATESHWARAN | Property tax is one of the main sources of income for…

1 day ago

Free Yoga classes in Temple Town

| S VENKATESHWARAN | Residents of Nanganallur have a wonderful opportunity to learnYoga free of…

1 day ago

நங்கநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் ஜூலை 25, சனிக்கிழமை காலை சிறப்பாக தொடங்கியது.

விழாவின் முதல் நாளில் காலை யாகசாலை பூஜைகள், புண்யாஹவாசனம், விநாயகர் பூஜை, கலச ஸ்தாபனம், மந்திர ஜபம் உள்ளிட்ட பல்வேறு…

1 day ago

Stunning view from below…

| S VENKATESHWARAN | The Chennai Metro Rail bridge work on Medavakkam MainRoad has reached…

1 day ago