Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கடந்த வாரம் 25ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்ற பவித்ர உற்சவம் பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலையில் நடைபெற்ற ஹோமத்தில் புனிதப்படுத்தப்பட்ட பவித்ர மாலைகள், ஹோம குண்டத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் எழுந்தருளியுள்ள தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்டது.
வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பக்தர்களின் பக்தி உணர்வை உயர்த்தியது.

பின் உற்சவத்தின் கடைசி நாளான 29ம் தேதி மாலை 7 மணியளவில் திருவீதி உலாவுடன் பவித்ரோத்சவம் நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியின் அருளைப் பெற்றனர்.

படங்கள் உதவி: RVR

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM