Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர் கன்னிகா காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ திருமால் மருகன் திருக்கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6 தேதி  (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் பக்தி பரவசமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அபிஷேகத்திற்குப் பிறகு முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்கரிக்கப்பட்ட சுவாமியை தரிசிக்க கன்னிகா காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியின் அருளாசியை பெற்றனர்.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM