Neighborhood Speaks

|ச வெங்கடேஸ்வரன்|

தில்லை கங்கா நகர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் கடந்த ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அம்மனுக்கு வளையல்களால் அழகிய அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், கோயில் முழுவதும் வண்ணமயமான வளையல்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு அலங்காரத்தை காணவும், அம்மனை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.

விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. பக்தர்கள் பக்தியுடன் அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM