Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தெய்வீக இயல் இசை மன்றம் சார்பில் 35ஆம் ஆண்டு இயல், இசை விழா ஆகஸ்ட் 1 முதல் 8 வரை நடைபெற உள்ளது. இந்த விழா வண்டிக்காரன் சாலை, கிண்டி, சென்னை – 600032 பகுதியில் உள்ள பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
விழாவின் தொடக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு நீதியரசர் திரு. தா. பரத சக்ரவர்த்தி தலைமை வகிக்கிறார்.
விழாவை முனைவர் க. நாகராஜன், தலைவர், எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக கண்ணக்குழி எம். பாலமுரளிகிருஷ்ணா, திரு. ரா. சந்திரராஜன், கவிஞர் விக்ரமன் மற்றும் மரபுப்பாக்கம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர்.
முதல் நாளன்று மாலை 5 மணிக்கு ‘கதையும் கானமும்’ மற்றும் ‘பார்புகழும் பாரதி’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழங்குவோர் ரித்திகா மற்றும் தீக்ஷா ஆகியோர்.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM