| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மி ஸமேத ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் திருக்கோவிலில், இந்த ஆண்டுக்கான (31 வது) பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழா நேற்று 7ம் தேதி (சனிக்கிழமை) முதல் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் உற்சவங்கள் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10ம் தேதி (செவ்வாய்க்கிழமை): கருட சேவை, 12ம் தேதி (வியாழக்கிழமை): நாச்சியார் திருக்கோலம், 14ம் தேதி (சனிக்கிழமை): திருத்தேர் அதனை தொடர்ந்து 16ம் தேதி (திங்கட்கிழமை): தீர்த்தவாரி, 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை): கும்ப ப்ரோக்ஷணம் நடைபெறும்.
இந்த புனித பிரம்மோற்சவத்தின் போது, ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் சிறப்பு பூஜைகள், மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறும்.
திருவிழா தொடர்பான மேலும் விவரங்களுக்கு, ஸ்ரீ கிருஷ்ணன் – 99625 14134 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, இறை அருளைப் பெற்றுச் செல்ல கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது
| S VENKATESHWARAN | A cleanliness awareness rally was organised at NehruGovernment Boys Higher Secondary…
| S VENKATESHWARAN |Music lovers are invited to enjoy a Carnatic classical musicconcert organised by…
| S VENKATESHWARAN | Two new spiritual books, ‘Sakta Upanishads’ and‘Bhavanopanishad’, were released in a…
| S VENKATESHWARAN |The ongoing sewage pipe replacement work on 1st Main Roadin Nanganallur, being…
| S VENKATESHWARAN |As part of an initiative, last week, the Inner Wheel Club ofNanganallur…
| S VENKATESHWARAN | Neighbourhood devotees will have an opportunity to participatein the Sri Radha…