| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மஹோத்சவத்தை வருகிற 21/4/2026 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று No. 7, 15வது தெரு, நங்கநல்லூரில் உள்ள ரஞ்ஜனி ஹாலில் கொண்டாட உள்ளனர்.
அன்று காலை 6.15 மணி முதல் 8 மணி வரை கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 12 மணி வரை பகவத்பாதாள் அருளிய ஸ்லோகங்கள் போட்டி. இதில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு பங்கேற்க உள்ளனர்.
மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
பிற்பகல் 5.30 மணிக்கு திரிஷதி அர்ச்சனை, மாலை 6.30 மணிக்கு திருத்தேரில் பகவத் பாதாள் திரு உருவப்பட வீதி ஊர்வலம் நடைபெறும்.
ஊர்வலம் நடைபெறும் இடம்: 14வது தெரு நங்கநல்லூர்- 3வது மெயின் ரோடு, தில்லைகங்கா நகர் 37வது தெரு – 29வது தெரு – அய்யப்பன் கோவில், ராம்நகர் 3வது மெயின் ரோடு -1வது மெயின் ரோடு – குருவாயூரப்பன் கோவில் – நங்கநல்லூர் – 7வது தெரு, வரசித்தி விநாயகர் கோவில் – 17வது தெரு நங்கநல்லூர் வழியாக ரஞ்ஜனி ஹால் வந்தடையும்
அனைவரும் கலந்துக்கொண்டு குருவருள் பெறுவோம்.
| S VENKATESHWARAN | A cleanliness awareness rally was organised at NehruGovernment Boys Higher Secondary…
| S VENKATESHWARAN |Music lovers are invited to enjoy a Carnatic classical musicconcert organised by…
| S VENKATESHWARAN | Two new spiritual books, ‘Sakta Upanishads’ and‘Bhavanopanishad’, were released in a…
| S VENKATESHWARAN |The ongoing sewage pipe replacement work on 1st Main Roadin Nanganallur, being…
| S VENKATESHWARAN |As part of an initiative, last week, the Inner Wheel Club ofNanganallur…
| S VENKATESHWARAN | Neighbourhood devotees will have an opportunity to participatein the Sri Radha…