Neighborhood Speaks

|ச வெங்கடேஸ்வரன்|

நங்கநல்லூரில் அமைந்துள்ள ஹயக்ரீவர் கோவிலில் ஜூலை 3ஆம் தேதி அன்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


இதனை முன்னிட்டு ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன், பெருமாள் மற்றும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் மாலை நேரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த திருவோண நட்சத்திர உற்சவம் பக்தி நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM