| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் திருக்கோவிலின் 10ஆம் ஆண்டு ப்ரஹ்மோத்சவம் ஜூலை 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பல்லக்கு புறப்பாடு மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஜூலை 2-ஆம் தேதி காலை மஹாலக்ஷ்மி அலங்காரம் – பல்லக்கு புறப்பாடு பின் மாலை சூரிய பிரபை புறப்பாடு நடைபெற்றது, ஜூலை 3-ஆம் தேதி சந்திர பிரபை, ஜூலை 4-ஆம் தேதி சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதியுலா எழுந்தருளினார். தொடர்ந்து ஜூலை 5-ஆம் தேதி கருட வாகனம், ஜூலை 6-ஆம் தேதி ஹனுமந்த வாகனம், ஜூலை 7-ஆம் தேதி யானை வாகனம், ஜூலை 8-ஆம் தேதி ஹம்ஸ வாகனம், ஜூலை 9-ஆம் தேதி குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதியுலா நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் ஜூலை 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவமும், ஜூலை 12 முதல் 14 வரை விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது. ஜூலை 14-ஆம் தேதி வெட்டிவேர் ஸப்பரம் தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவத்துடன் திருவிழா நிறைவடைய உள்ளது.
இந்த கோலாகலமான பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தகவல் வழங்கியவர் திரு.பாலாஜி அவர்கள். படங்கள் RVR.







