| ச வெங்கடேஸ்வரன் |
ஆதம்பாக்கம் சாந்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சரதாம்பாள் ஆலயத்தில் தைப்பூச திருவிழா ஜனவரி 30ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தைப்பூச விழாபிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு, ‘நாத குமர நமஹ வழி கந்தர் அனுபூதி’ என்ற தலைப்பில் ஸ்ரீமதி வஸ்த்சல்யா துளசிதரன் அவர்களால் இரு நாட்கள் சங்கீத உபந்யாசம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆன்மிக இன்பம் பெற்றனர்.




