Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர், கன்னிகா காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திருமால் மருகன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா கடந்த 1.2.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 108 பால்குட அபிஷேகம், சந்தன காப்பு நடைமுறை மற்றும் மகா தீபாராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர். திருவிழாவின் ஒரு பகுதியாக 600க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தைப்பூச திருவிழாவை பக்தி நிறைந்த சூழலில் கொண்டாடினர். ஆலய நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM