Neighborhood Speaks

|ச வெங்கடேஸ்வரன்|

நங்கநல்லூரில் உள்ள ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி கிரஹ சாந்தி ஹோமம் நடைபெற்றது. ஆயுஷ்காரகனாக கருதப்படும் சனி பகவான் கடந்த 6ம் தேதி மார்ச், 2026  அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அன்று காலை 9 மணிக்கு சனி பகவானை பிரார்த்தித்து சனி கிரஹ சாந்தி ஹோமம் நடைபெற்றது. முதலில் கலச ஸ்தாபனம் செய்து நவகிரக மண்டலத்தில் நவகிரக தேவதைகள் மற்றும் நக்ஷத்திர தேவதைகளை ஆவாஹனம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கிரஹ சாந்தி ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கலச தீர்த்தத்தால் சனி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் மற்றும் ரக்ஷை வழங்கப்பட்டது.

மேலும் சனிப்பெயர்ச்சி சாந்திக்கு ஆதரவு அளித்தவர்கள் தங்கள் குடும்பத்தினரின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்தனர். இந்த சனிப்பெயர்ச்சி சாந்தி நிகழ்ச்சி பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM