Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

தில்லைகங்கா நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் வசந்த நவராத்திரி விழா மார்ச் 18ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் மிகவும் பக்தி பூர்வமாக தொடங்கி 19ம் தேதி முதல் வசந்த நவராத்திரி நடந்து வருகிறது.

மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தினங்களில், தினமும் காலை நேரத்தில் நவாவரண பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலை நேரங்களில் சண்டி பாராயணம், நவாவரண பூஜை மற்றும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மார்ச் 21ஆம் தேதி மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளும் அதேபோல் சிறப்பாக நடைபெற்றன. மேலும் இன்னும் 7 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ளது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM