Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர் தில்லைகங்கா நகரில் அமைந்துள்ள ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஷு கனி விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

புத்தாண்டு தினமான அன்று அதிகாலை முதலே அம்பாள் மண்டபத்தில் அழகிய கோலங்களுடன் விஷு கனி அலங்காரம் செய்யப்பட்டு, விளக்கு, பழங்கள், பூக்கள், புதிய வஸ்திரம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி, புத்தகங்கள் மற்றும் நாணயங்கள் போன்ற மங்கள பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து விஷு கனி தரிசித்து, அம்பாளையும் பெருமாளையும் பக்தியுடன் வழிபட்டனர். பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்ததால் கோவில் முழுவதும் பக்தி மயமான சூழல் நிலவியது.

இந்த விழா சிறப்பாக நடைபெற கோவில் நிர்வாகம் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தது. முக்கியமாக பெண்கள் தன்னார்வலர்கள் உத்தழைப்புடன் மிக நேர்த்தியாக விஷு மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM