Neighborhood Speaks

|ச வெங்கடேஸ்வரன்|

நங்கநல்லூரில் 2வது மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயவதன பெருமாள் கோவிலில் 47-ஆம் ஆண்டு சித்திரா பௌர்ணமி உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. வருகிற மே 1ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பெருமாள் புறப்பாடு நடைபெறும். பின்னர் காலை 10 மணியளவில் திரும்புகால் நடைபெறும். அதனை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஹயக்ரீவ மகாத்மியம் உபன்யாசம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெறும்.

அதேபோல் மாலை 6 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெறும். அர்ச்சனை காலை 11 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும்.

இந்த சித்திரா பௌர்ணமி விழாவை ஸ்ரீ பாதம் தாங்கிகள் சங்கம் இணைந்து நடத்துகிறது. இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளின் அருளைப் பெறுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், கடந்த 23ம் தேதி ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு கோவிலில் மாலை சிறப்பு கோஷ்டி பாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ராமானுஜர் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் நங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM