| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை உத்திரம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி அம்மன் – ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மிகுந்த ஆனந்தத்துடன் மற்றும் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 28ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை நடைபெற்ற இந்த தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சி, பக்தர்களின் பெரும் வருகையுடன் சிறப்பாக அமைந்தது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த தெய்வீக திருக்கல்யாணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றதுடன், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவன் அருளைப் பெற்றனர்.





