Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமம் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் கோவிலில் காலை 7.30 மணிக்கு பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு வீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சத்யநாராயண பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் காலை 6.30 மணிக்கு அம்பாள் அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாஞ்ச கல்பலதா கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு ஸ்ரீசக்கர நவாவரண பூஜையும், 6.45 மணிக்கு சந்த்யோத்ஸவமும் நடைபெற்றது. இறுதியாக இரவு 8.30 மணிக்கு சயன சேவை நடைபெற்றது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM