Categories: Temple News

ஆதம்பாக்கம் கோவிலில் வித்யார்த்தி ஹோமம்

| ச வெங்கடேஸ்வரன் |

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் சார்பில் ஸ்ரீ சாரதாம்பாள் நான்காம் ஆண்டு வித்யார்த்தி ஹோமம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஸ்ரீ கற்பக விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து காலை 8 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம் மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் மூலமந்திர ஹோமம் நடைபெற உள்ளது.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், நினைவாற்றல் மற்றும் புத்திக்கூர்மை வளரவும் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு தெய்வ அருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இந்த சிறப்புமிக்க ஹோமம் பக்தர்களின் பெரும் வரவேற்புடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புக்கு – செயலாளர் ஸ்ரீ M. ரமணி – 94440 53516, 044 3550 6863

venkat

Recent Posts

Koti Gayatri japam poorthi homam to be conducted

| S VENKATESHWARAN | The grand koti Gayatri yagnam poorthi homam will be held at…

1 day ago

Panchami Carnatic music concert at Ranjani Hall

| S VENKATESHWARAN | Get ready to immerse yourself in the enchanting melodies ofCarnatic music!The…

1 day ago

ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி

| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூர் ராம் நகர் அசோசியேஷன் நிர்வாகத்தில் இயங்கும் ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனி பெயர்ச்சி பரிகார…

1 day ago

Making elders walk for their own welfare

| S VENKATESHWARAN | Diha Clinic conducted its second edition of ‘Nadanga Nallur –Senior Citizens…

1 day ago

Telling tales of the spiritual kind

| S VENKATESHWARAN | Kum. Shree Vayidehi, also known as Champakavalli, born onSeptember 18, 2008,…

1 day ago

நங்கநல்லூரில் மாசி மகம் தெப்போற்சவம்

| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூரில் உள்ள வேதாந்த ஸ்தாபன ஸபா ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதன பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்போற்சவம் சிறப்பாக…

1 day ago