Categories: Temple News

பிரம்மோற்சவம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள்

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லஷ்மி சமேத ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் திருக்கோயிலில் இந்த ஆண்டு 31வது பிரம்மோற்சவம் கடந்த 7ம் தேதி (சனிக்கிழமை) முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழா 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் பிரசாத விநியோகம் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் போது, ஸ்ரீ ராஜகோபால சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஏற்கனவே 10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கருட சேவை மற்றும் 12ம் தேதி (வியாழக்கிழமை) நாச்சியார் திருக்கோலம் பக்தர்களின் திரளான பங்கேற்புடன் நடைபெற்றது. 14ம் தேதி (சனிக்கிழமை) திருத்தேர் உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது.

இன்னும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளாக 16ம் தேதி (திங்கட்கிழமை) தீர்த்தவாரி மற்றும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்ப ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.

திருவிழா தொடர்பான மேலும் தகவல்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் – 99625 14134 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இப்புனித பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறை அருளைப் பெற்றுச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

venkat

Recent Posts

Koti Gayatri japam poorthi homam to be conducted

| S VENKATESHWARAN | The grand koti Gayatri yagnam poorthi homam will be held at…

1 day ago

Panchami Carnatic music concert at Ranjani Hall

| S VENKATESHWARAN | Get ready to immerse yourself in the enchanting melodies ofCarnatic music!The…

1 day ago

ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி

| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூர் ராம் நகர் அசோசியேஷன் நிர்வாகத்தில் இயங்கும் ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனி பெயர்ச்சி பரிகார…

1 day ago

Making elders walk for their own welfare

| S VENKATESHWARAN | Diha Clinic conducted its second edition of ‘Nadanga Nallur –Senior Citizens…

1 day ago

Telling tales of the spiritual kind

| S VENKATESHWARAN | Kum. Shree Vayidehi, also known as Champakavalli, born onSeptember 18, 2008,…

1 day ago

நங்கநல்லூரில் மாசி மகம் தெப்போற்சவம்

| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூரில் உள்ள வேதாந்த ஸ்தாபன ஸபா ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதன பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்போற்சவம் சிறப்பாக…

1 day ago