| ச வெங்கடேஸ்வரன் |
மடிப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் எம்.எஸ்.எஸ் அறக்கட்டளை (உழவாரப்பணி குழு – சென்னை) சார்பில் 46 வது உழவாரப்பணி சேவை நடைபெற உள்ளது. “உடலுக்கு உழவாரம், நாவுக்கு தேவாரம்” என்ற அழைப்புடன் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டனர்.
இந்த உழவாரப்பணி இன்று (22.2.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் திருக்கோயில், பஜனை கோயில் தெரு, ராஜராஜேஷ்வரி நகர், மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில், சென்னை – 600091 இல் நடைபெறுகிறது.
கோயில் தூய்மை பணிகள் மற்றும் தேவாரப் பாடல்கள் மூலம் ஆன்மீக சேவை செய்யும் இந்த நிகழ்வில் பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உழவாரப்பணியில் கலந்துகொள்ள விரும்பும் தொண்டர்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்யுமாறு MSS Trust கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்புக்கு: 9444282163, 8754400154, 9840645092.
அனைவரும் திரளாக கலந்து கொண்டு சேவையில் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
| S VENKATESHWARAN | The grand koti Gayatri yagnam poorthi homam will be held at…
| S VENKATESHWARAN | Get ready to immerse yourself in the enchanting melodies ofCarnatic music!The…
| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூர் ராம் நகர் அசோசியேஷன் நிர்வாகத்தில் இயங்கும் ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனி பெயர்ச்சி பரிகார…
| S VENKATESHWARAN | Diha Clinic conducted its second edition of ‘Nadanga Nallur –Senior Citizens…
| S VENKATESHWARAN | Kum. Shree Vayidehi, also known as Champakavalli, born onSeptember 18, 2008,…
| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூரில் உள்ள வேதாந்த ஸ்தாபன ஸபா ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதன பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்போற்சவம் சிறப்பாக…