| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்ச கருட சேவா சமிதியின் ஏற்பாட்டில், மே 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்ச கருட சேவை மஹோத்ஸவம் மிக விமரிசையாக நடைபெற்றது. நங்கநல்லூரில் உள்ள செல்லம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பல வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட இந்த மஹோத்ஸவம், இந்தாண்டும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.
நங்கைநல்லூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோயில், மடிப்பாக்கம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் கோயில், மடிப்பாக்கம் ஸ்ரீ கோதண்டராமர் கோயில், ஆதம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில் மற்றும் கீழ்கட்டளை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஆகிய ஐந்து திருக்கோயில்களில் இருந்து கருட வாஹனத்தில் எழுந்தருளிய பெருமாள்கள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
| S VENKATESHWARAN | A cleanliness awareness rally was organised at NehruGovernment Boys Higher Secondary…
| S VENKATESHWARAN |Music lovers are invited to enjoy a Carnatic classical musicconcert organised by…
| S VENKATESHWARAN | Two new spiritual books, ‘Sakta Upanishads’ and‘Bhavanopanishad’, were released in a…
| S VENKATESHWARAN |The ongoing sewage pipe replacement work on 1st Main Roadin Nanganallur, being…
| S VENKATESHWARAN |As part of an initiative, last week, the Inner Wheel Club ofNanganallur…
| S VENKATESHWARAN | Neighbourhood devotees will have an opportunity to participatein the Sri Radha…